புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களின் தாக்கம் இன்று சாமானியர்களிடமும் அதிகரித்துள்ளதற்கு ரசாயன பொருட்கள் கலந்த உணவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால், அண்மைக்காலமாக இயற்கை முறை வேளாண் உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வும், தேவையும் அதிகரித்திருத்து வருகின்றன.

   இதில், மிகப் பெரிய வணிக வாய்ப்புகள் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்நிலையில்,இந்தியாவில் விவசாயத்தில், சத்தமின்றி ஒரு புரட்சி நடந்து வருகிறது. இங்குள்ள விவசாயிகளில் பெரும்பாலோர் இயற்கை முறை பூச்சிக்கொல்லிகளுக்கு மாறியுள்ளனர்.
   1970-களில் இந்தியாவில் நிகழ்ந்த பசுமைப் புரட்சியால் உணவு தானிய உற்பத்தி கணிசமாக அதிகரித்தாலும், சில எதிர்மறை விளைவுகளும் கூடவே நடந்தன. கட்டுப்பாடற்ற ரசாயன உர பயன்பாடு விவசாயிகளிடையே அதிகரித்தது, அது பல முனைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.





   இதைத் தொடர்ந்தே இயற்கைமுறை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. இந்தியாவில் தொடங்கிய முதல் வேளாண் அறிவியல் மையமான இங்கு,இயற்கை முறை பூச்சிக்கொல்லிகள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் பூச்சிக்கொல்லி தயாரிப்பும் நடக்கிறது.
  அதோடு, இயற்கை முறை விவசாயத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் இந்த மையம் மக்களிடம் கொண்டு செல்கிறது. அசோஸ்பைரில்லம் போன்ற பாசிகள், வேப்பெண்ணெய், மாட்டுச்சாணம் போன்ற இயற்கை பூச்சிக் கொல்லிகளின் அவசியம் குறித்தும் விளக்கப்படுகிறது
   இயற்கை முறை பூச்சிக் கொல்லிகளை பிரபலப்படுத்த இந்த மையம் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை தந்துள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள பெருமளவு விவசாயிகள், ரசாயன பூச்சிக் கொல்லிகளை தவிர்த்து, இயற்கை முறை மருந்துகளுக்கு மாறியுள்ளனர். ரசாயன தயாரிப்புகளை பயன்படுத்துவதால், பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சியினங்களும் சேர்ந்து பரிதாபமாக அழிக்கப்படுவதாக கூறும் இம்மையத்தின் விஞ்ஞானிகள், இயற்கை முறை பூச்சிக் கொல்லிகளில் இப்பிரச்னை இல்லை என்கின்றனர். மேலும், ரசாயன பூச்சிக்கொல்லிகளால் நிலத்தின் தன்மை மாறுவது போன்ற தீமைகளும் இருக்காது என கூறப்படுகிறது. இதற்கிடையில், இயற்கை முறையைப் பின்பற்றுவதால், தங்களுக்கு கிடைத்த பலன்களை சம்மந்தப்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்கள்.

இயற்கை முறை விவசாயம் பெருகி வருவது, இவ்விவசாயிகளுக்கு பலன் தருகிறது என்பதுடன், மக்களின் வளமான வாழ்வுக்கும், அதன்மூலம் நாட்டின் வலுவான பொருளாதாரத்துக்கும் வழி வகுக்கிறது. எனவே, இந்தியாவில் நடந்து வரும் இந்த சத்தமில்லாத புரட்சியை உலகம் முழுக்க பரப்ப வேண்டிய அவசியமும் உள்ளது. இதில் அரசுக்கு மட்டுமின்றி, தனிப்பட்ட நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

USE ORGANIC BOOSTERS AND GET MORE YIELD


CONTACT-09941681652

E-mail- greenalliance4u@gmail.com/

       pasumai4u@gmail.com